
வளர்த்த நாயை தாந்த்ரீக பலி கொடுத்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்
பெங்களூருவில் தான் வளர்த்த நாயை, தாந்த்ரீக பலி கொடுத்ததாக கருத்தப்படும் மேற்கு வங்க பெண்ணுக்கு போலீசார் வலைவிரித்துள்ளனர்.
குடியிருப்பாளர்கள் மற்றும் விலங்கு பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆழ்ந்த கவலைக்குரிய சம்பவம் ஒன்று பெங்களூருவில் நடந்துள்ளது. ஒரு பெண் தனது மூன்று வளர்ப்பு நாய்களில் ஒன்றை சூனியம் சம்பந்தப்பட்ட ஒரு கொடூரமான ‘தாந்த்ரீக’ சடங்கில் பலி கொடுத்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த வார தொடக்கத்தில் வெளிச்சத்திற்கு வந்த இந்த சம்பவம், பரவலான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செல்லப்பிராணிகளின் பாதுகாப்பு மற்றும் விலங்கு உரிமைகள் குறித்த புதிய கவலைகளைத் தூண்டியுள்ளது.
மேலும் படிக்க | விமான நிலைய பணிகளை சீர்குலைக்க சதித்திட்டம்.. ஏர் இந்தியா விமானி கைது! நடந்தது என்ன?
யார் இந்த பெண்?
குற்றம் சாட்டப்பட்டவர் பெங்களூரின் மகாதேவபுரா பகுதியில் வசிக்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிபர்ணா பயாக் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தனது செல்லப்பிராணியான லாப்ரடார் நாயை முதலில் கழுத்தை நெரித்தும், அதன் பின்னர் தனது வீட்டுக்குள் கழுத்தை அறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொடூர செயலைத் தொடர்ந்து, அவர் நாயின் உடலை துணியால் சுற்றி, தனது வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி, வீட்டை பூட்டிவிட்டு மறைந்தார். பூட்டப்பட்ட பிளாட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கட்டிடத்தில் வசிப்பவர்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ‘ரா’ அமைப்புக்கு புதிய தலைவர்.. ஆபரேஷன் சிந்தூர் ஸ்பெஷலிஸ்ட்.. யார் இந்த பராக் ஜெயின்?
ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) அதிகாரிகள் வந்து கதவை வலுக்கட்டாயமாக திறந்தபோது, லாப்ரடாரின் கழுத்தில் ஆழமான வெட்டுடன் அழுகிய உடலைக் கண்டுபிடித்தனர். அதில் ஆறுதலாக விசயம், மேலும் இரண்டு நாய்கள் குடியிருப்புக்குள் உயிருடன் காணப்பட்டன, அவை ஒரு சுவரில் இறுக்கமாக கட்டப்பட்டு கவனிப்பின்றி விடப்பட்டிருந்தன. “உயிர் பிழைத்த நாய்கள் மீட்கப்பட்டு தற்போது பிபிஎம்பி விலங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன” என்று புகார் அளித்த டாக்டர் ருத்ரேஷ் குமார் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | சண்டே ஸ்பெஷல் கமகமக்கும் மட்டன் பிரியாணி எப்படி செய்வது பாருங்க.. ருசி அட்டகாசம் தா
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
கொல்லப்பட்ட நாய் இறந்து 4 நாட்கள் ஆகியிருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. சம்மந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்குள் மத சடங்குகள் நடந்ததற்கான பொருட்கள் சிதறிக் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இது அங்கு ‘தாந்த்ரீக’ சடங்கு நடந்ததை விளக்குவதாக போலீசார் கருதுகின்றனர். இந்த கொலை சூனிய நடைமுறைகளின் விளைவாக நடந்ததா அல்லது பெண்ணின் மனநலக் கோளாறு காரணமாக நடந்ததாக என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். திரிபர்ணா மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய ஐபிசி பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான தேடுதல் நடந்து வருகிறது.