
டெஸ்லா இன்க் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியும், பில்லியனர் எலான் மஸ்க்கின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவருமான ஒமீத் அஃப்ஷர், அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்
எலோன் மஸ்க்கின் நம்பிக்கைக்குரியவராகவும், டெஸ்லாவின் ‘சக்திவாய்ந்த’ நிர்வாகியாகவும் இருந்த ஓமீத் அஃப்ஷர், அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். யார் இந்த அஃப்ஷர்?
டெஸ்லா இன்க் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியும், பில்லியனர் எலான் மஸ்க்கின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவருமான ஒமீத் அஃப்ஷர், தன்னுடைய மின்சார வாகன தயாரிப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, அஃப்ஷர் நிறுவனத்திலிருந்து வெளியேறிய செய்தி சில ஊழியர்களிடையேயும், உள்நாட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் வெளியானதும், ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் சார்பில் அனுப்பிய கேள்விகளுக்கு அஃப்ஷர் மற்றும் எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா ஆகியோரிடமிருந்து பதில் வரவில்லை.
மேலும் படிக்க | டெஸ்ட் போட்டிகளில் ‘ஸ்டாப் கிளாக்’ முறையை அறிமுகம் செய்த ஐசிசி.. புதிய விதிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்!
யார் இந்த ஓமீத் அஃப்ஷர்?
ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடிமகனான ஒமீத் அஃப்ஷர் டெஸ்லாவில் திட்ட மேலாளராக சேர்ந்தார். டெஸ்லாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். பல ஆண்டுகளாக பில்லியனர் எலோன் மஸ்க்கின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக ஆனார். டெஸ்லாவின் சக்தி வாய்ந்த நிர்வாகியாக செயல்பட்டு வந்த அஃப்ஷரின் வெளியேற்றத்திற்கான காரணம், இன்னும் முழுமையாக தெரியவரவில்லை. அதே நேரத்தில், அவருடைய அடுத்த பயணம் என்ன என்பதும், இன்னும் அறிவிக்கப்படவில்லை. மனவருத்தத்தால் எடுத்த முடிவா? அல்லது, வேறு வாய்ப்புகளை நோக்கி நகரும் முடிவா? என்பது, முறையான அறிவிப்புக்கு இடையே தான், தெரியவரும்.
மேலும் படிக்க | ‘அமெரிக்கா முகத்தில் அறைந்தோம்..’ 12 நாள் போருக்கு பின் மனம் திறந்த ஈரான் தலைவர் காமெனி!
(தற்போது வெளியான தகவல் என்பதால், கூடுதல் விபரங்கள் விரைவில் புதுப்பிக்கப்படும் )