
காரசாரமான வெங்காய குருமா
வெறும் வெங்காயம் தக்காளி மட்டும் இருந்தால் போதும். இந்த மாதிரி காரசாரமாக ஒரு குருமா செய்து பாருங்க. ருசி அட்டகாசமாக இருக்கும்.
வீட்டில் காய்கறி வாங்கவில்லையா.. வெறும் வெங்காயம் தக்காளி மட்டும் இருந்தால் போதும். இந்த மாதிரி காரசாரமாக ஒரு குருமா செய்து பாருங்க. ருசி அட்டகாசமாக இருக்கும். இந்த குழம்புக்கு அப்பளம் அல்லது ஒரு ஆம்லேட் இருந்தால் போதும். ருசி அட்டகாசமாக இருக்கும்.
வெங்காய குருமா செய்ய தேவையான பொருட்கள்
வெங்காயம் – நான்கு
எண்ணெய் – போதுமான அளவு
தேங்காய் துருவல் – மூன்று கரண்டி
எள் – ஒரு ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – மூன்று ஸ்பூன்
மிளகாய் – ஒன்றரை ஸ்பூன்
சீரகப் பொடி – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் – அரை ஸ்பூன்
தக்காளி – மூன்று
புளி – நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி இலைகள் – இரண்டு ஸ்பூன்
வெங்காய குருமா செய்முறை
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு வெங்காயத்தைச் சேர்த்து அந்த நிறம் மாறும் வரை நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் மாறிய பிறகு, தேங்காய்த் துருவலைச் சேர்த்து கலக்கவும். இப்போது எள்ளைச் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை நன்றாக ஆற வைத்து பின்னர் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
மேலும் படிக்க | சண்டே ஸ்பெஷல் கமகமக்கும் மட்டன் பிரியாணி எப்படி செய்வது பாருங்க.. ருசி அட்டகாசம் தா!
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணெயில் நன்றாக கலக்க வேண்டும். மிளகாய்த் தூள், சீரகத் தூள், கொத்தமல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.பின்னர் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும். இந்தக் கலவையில் தக்காளியை நன்றாக அரைத்து, சேர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | பார்த்தாலே எச்சில் ஊறும் நெத்திலி கருவாட்டு குழம்பு.. கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்வது பார்க்கலாமா!
பின்னர் மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு கைப்பிடி வெங்காயத் துண்டுகளைச் சேர்த்து வதக்க வேண்டும். ஊற வைத்த புளியை கரைத்து குழம்பில் சேர்க்க வேண்டும். வாணலியில் உள்ள கலவையில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் ஏற்கனவே அரைத்த கலவையையும் சேர்க்க வேண்டும். பின்னர் குழம்பை மூடி கால் மணி நேரம் குறைந்த தீயில் சமைக்க வேண்டும். குழம்பு கொதித்த பிறகு எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும் வரை இப்படியே வைக்க வேண்டும். பிறகு,குழம்பின் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைக்க வேண்டும். அவ்வளவுதான், சுவையான வெங்காய குருமா ரெடி. இதை சூடான சாதம் அல்லது சப்பாத்தி ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். நன்றாக இருக்கும். இந்த குழம்புடன் ஒரு அப்பளம் அல்லது ஆம்லேட் இருந்தால் போதும்.ருசி அட்டகாசமாக இருக்கும்.