
தவறால் விபத்து ஏற்பட்டதால், காப்பீடு வழங்கத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Supreme Court: ஓட்டுநரின் தவறான ஏற்படுத்தும் விபத்துகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Supreme Court: விபத்தில் ரவீஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி, மகன் மற்றும் பெற்றோர் ஆகியோர் ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். அந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போது, ரவிஷின் வேகமான மற்றும் கவனக்குறைவான செயல்பாடு தான் வாகனம் விபத்துக்கு காரணம் என தெரிவித்தனர்.
மேலும் படிக்க | MLC 2025: சம்பவம் செய்த ஹெட்மியர்.. சந்தில் சிந்து பாடிய சியாட்டில் ஓர்காஸ் அணி!
Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிவேகம் மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒரு பெரிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஸ்டண்ட் செய்யும் போது தங்கள் சொந்த தவறு காரணமாக உயிர் இழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனம் கடமைப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ரவீஷ் மரணத்திற்குப் பிறகு நீதிமன்றத்தை அணுகிய அவரின் பெற்றோருக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜூன் 18, 2014 அன்று, என்.எஸ்.ரவிஷ், மல்லசந்திரா கிராமத்திற்கும் அரசிக்கரே கிராமத்திற்கும் இடையே ஃபியட் லீனியாவில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தை, சகோதரி மற்றும் குழந்தைகள் காரில் அமர்ந்திருந்தனர். ஊடக அறிக்கைகளின்படி, ரவிஷ் அதிக வேகத்தில் மிகவும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியுள்ளார். மயிலனஹள்ளி அருகே வாகனத்தின் கட்டுப்பாட்டை இழப்பதற்கு முன்பு போக்குவரத்து விதிகளை அவர் மீறினார். அப்போது, சாலையில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ரவீஷ் உயிரிழந்தார்.

Supreme Court: அடுத்தடுத்து முறையீடு..
இந்த வழக்கில், அவரது மனைவி, மகன் மற்றும் பெற்றோர் ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போலீசார் குற்றப்பத்திரிகையில், ரவிஷின் வேகமான மற்றும் கவனக்குறைவான செயல்பாடு தான், வாகனம் விபத்துக்கு வழிவகுத்ததாகக் கூறியிருந்தனர். இந்த காரணத்தைக் காட்டி, அவர்களின் கோரிக்கையை மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் நிராகரித்தது. பின்னர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக அவர்கள் முறையிட்டனர். அங்கும் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர்.
மேலும் படிக்க | MLC TSK vs WAF: 5 ஓவர்களில் அதிக ரன்கள்: வாஷிங்டன் அணியை வாஷ்அவுட் செய்த டெக்ஸாஸ்!
“இறந்தவரின் சட்டப்பூர்வ பிரதிநிதியின் சார்பாக ஒரு கோரிக்கை வைக்கப்படும்போது, இறந்தவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்கு பொறுப்பல்ல என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியம். காப்பீட்டு நிறுவனம் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு பணம் செலுத்தும் வகையில் இறந்தவர் பாலிசியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியம். இந்த வழக்கில், விபத்து அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்தது, மேலும் அவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டவர். அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் இழப்பீடு கோர முடியாது” என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Supreme Court: உச்சநீதிமன்றம் சொன்ன காரணம்
“இறந்தவரின் சட்டப்பூர்வ பிரதிநிதி சார்பாக ஒரு உரிமைகோரல் செய்யப்படும்போது, இறந்தவர் வேகமாக மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதற்கு பொறுப்பல்ல என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியம். இறந்தவர் பாலிசியின் கீழ் உள்ளார் என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியம், இதனால் காப்பீட்டு நிறுவனம் சட்டப்பூர்வ உரிமைகளை செலுத்துகிறது. “இந்த வழக்கில், வேகமாக மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது, மேலும் அவர் சுய தீங்கு விளைவிக்கும் நபராக கருதப்படுகிறார். அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் இழப்பீடு கோர முடியாது என்று, இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ம, ஆர்.மகாதேவன் ஆகியோர் தெரிவித்தனர். மேலும் இந்த காரணங்களை சுட்டிக்காட்டி, உயிரிழந்த குடும்பத்திற்கு அவர்கள் நிவாரணம் வழங்க மறுத்துவிட்டனர். எந்தவொரு வெளிப்புற காரணமும் இல்லாமல், உயிரை இழந்த நபரின் தவறு காரணமாக விபத்து ஏற்பட்டால் குடும்பம் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பணம் கோர முடியாது என்றும் அந்த உத்தரவில் பெஞ்ச் தெரிவித்துள்ளது.