
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று
12 ராசிகளுக்கும் இன்று (26.06.2025) சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜூன் 26 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஜூன் 26 ஆம் தேதியான இன்று (வியாழக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே இன்று நீங்கள் நிதானமாக இருக்க வேண்டிய நாள். பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் செய்வது உங்களுக்கு தப்பு என்று தெரியாது. ஆனால் பார்ப்பவர்களுக்கு அது தப்பு என்று தெரியும் அது உங்களை பற்றிய எண்ணத்தை வேறு மாதிரி கொண்டு செல்லும் எனவே ஜாக்கிரதையாக இருங்கள். எனவே வழிபாடு செய்யுங்கள் நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்படுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு சூப்பரான நாள் இன்று. பிறவி குணமான தைரியம், சுறுசுறுப்பு எதிரிகளுக்கு உதவக்கூடிய மனப்பான்மை உங்களுக்கு பெரிதும் உதவும். உங்களுக்கு அமோகமான நாள் இன்று.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே என்று உங்களுக்கு பிரமாதமான நாள். இந்த நாள் உங்களுக்கு வெற்றி உயர்வு சந்தோஷம் இருக்கும். பேச்சு சாமர்த்தியம், பொறுமை, நிதானம் ஜெயிக்கும். நல்ல நாளாக உங்களுக்கு கட்டாயம் இருக்கும்.
கடகம்
கடக ராசி நேயர்களே உங்களுக்கு நாள் நன்றாக இருக்கிறது. பேச்சு சாமர்த்தியம் பொறுமை, நிதானம் ஜெயிக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை விநாயகருக்கு பூஜை செய்யலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு சிறப்பான நாளாக இல்லை. இந்த நாள் உங்களுக்கு பதட்டம், தடுமாற்றம், குழப்பம் இருக்கும். உங்களுக்கு தப்பு எல்லாம் சரியாக தெரியும் எனவே நிதானமாக இருந்து சிந்தித்து செயல்பட்டால் நல்லது.
கன்னி
கன்னி ராசி நேயர்களே உங்களுக்கு நாள் சிறப்பாக இருக்கிறது. பேச்சு சாமர்த்தியத்தால் காரியத்தை வெல்வீர்கள். இந்த நாள் நல்ல நாளாக கட்டாயம் இருக்கும். வாழ்க்கை வளமாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.