
நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த் கொக்கேன் வழக்கு
கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரை அடுத்து நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்த நிலையில், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
போதை வழக்கில் கைதான அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் அளித்த தகவலின் பேரில், நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், ஸ்ரீகாந்திடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் கிருஷ்ணாவை சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “இது ஒரு தொடர்ச்சியான விசாரணை என்றும், இப்போதைக்கு, இது பற்றி எங்களால் வேறு எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது என்றும், விசாரணைக்குப் பின் அது தொடர்பான கூடுதல் தகவலை தருவோம்,’’ என்று, என்டிடிவி.,யிடம் அவர்களுக்கு நெருக்கமான அதிகாரி கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்த வழக்கில் இரண்டு முன்னணி நடிகைகளும் போலீஸ் ஸ்கேனரின் கீழ் இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. யார் அந்த நடிகைகள்? அவர்கள் எப்படி இந்த வளையத்தில் வந்தார்கள்? அவர்களைப் போல, வேறு யாரெல்லாம் இந்த போதை நெட்வொர்க்கில் இருக்கிறார்கள்? என்பது தொடர்பான விபரங்கள், அடுத்தடுத்து விசாரணை வளையத்தில் தெரியவரும் என்று தெரிகிறது. முன்னதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், ஜூலை 7 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சுமார் 8 மணி நேரம் போலீசாரால் விசாரிக்கப்பட்ட ஸ்ரீகாந்தை ஜூலை 7 வரை நீதிமன்றக் காவலில் வைக்க செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க | ஸ்ரீகாந்த் போதை விவகாரத்தை அன்றே கணித்த பாக்கியலட்சுமி சீரியல்?
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில், அவரது உடலில் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 7 வெற்று கோகைன் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை இரவு எழும்பூர் 14-வது பெருநகர மாஜிஸ்திரேட் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கொக்கைன் போதைப் பொருளைப் பெற்று பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது நிதி பரிவர்த்தனைகள் சரிபார்க்கப்பட்டு, அவரது வீடுகள் முழுமையாக சோதனையிடப்பட்டு, தகுந்த ஆதாரங்களுடன் அவர் கைது செய்யப்பட்டார்” என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரசாத் மீது குற்றச்சாட்டுகள் மே 22 அன்று பப் குடிபோதையில் தகராறில் கைது செய்யப்பட்ட பிரசாத் மற்றும் அவரது நண்பர் அஜய் வந்தையார் ஆகியோர் சென்னை மற்றும் சில இடங்களில் உள்ள நில உரிமையாளர்களை மிரட்டுவது மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்களின் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்துடன் போலி ஆவணங்களைத் தயாரிப்பது போன்ற பிற குற்றங்களில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரசாத் பற்றி விசாரித்தபோது, அவரது வீடு மற்றும் வங்கி அறிக்கைகளை விரிவான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ஆய்வு செய்ததில், அவர் ஒரு கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. பிரசாத் பண மோசடியில் ஈடுபட்டு சுமார் ரூ .2 கோடி மோசடி செய்தார்.
மேலும் படிக்க | ஹர்த்திக் பாண்டியா உடன் டேட்டிங் உண்மையா? பிரபல நடிகை வெளிப்படை!
விசாரணையில், சென்னை மாநகராட்சி, டிஎன்பிஎஸ்சி, குடிநீர் வாரியம், வருமான வரித்துறை, ரயில்வே ஆகிய துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 200 பேரிடம் தலா ரூ.2 லட்சம் பெற்றது தெரியவந்தது. பிரசாத்துடன் தொடர்பு வைத்திருக்கும் மதுரையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி செந்திலும் கைது செய்யப்பட்டார். இதன் அடிப்படையில் பிரசாத் உள்ளிட்ட 3 பேர் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.