
நடிகை சரோஜாதேவி திரைப்படங்கள் எந்த அளவிற்கு ரசிகர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதோ, அதே அளவிற்கு அவர் நடிப்பில் வெளிவந்த எத்தனையோ பாடல்கள் இன்று வரை நீங்கா இடம் பிடித்துள்ளன. ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத நடிகை சரோஜாதேவியின் திரைப்பட பாடல்களின் தொகுப்பு குறித்து இங்கே காணலாம்.
இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி. உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 87 ஆகும். இவர் கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி என மேற்கு கூறப்பட்ட அனைத்து மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அபிநய சரஸ்வதி கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சரோஜாதேவி தனது 17 வயதில் மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழில் எம்ஜிஆர் இயக்கத்தில் வெளியான நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார்.
அதற்குப் பிறகு தமிழ் சினிமாவின் உச்சம் பெற்ற நடிகையாக வலம் வந்துள்ளார். நடிகர் எம்ஜிஆர் உடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார். இவர் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சரோஜாதேவி திரைப்படங்கள் எந்த அளவிற்கு ரசிகர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதோ, அதே அளவிற்கு அவர் நடிப்பில் வெளிவந்த எத்தனையோ பாடல்கள் இன்று வரை நீங்கா இடம் பிடித்துள்ளன. ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத நடிகை சரோஜாதேவியின் திரைப்பட பாடல்களின் தொகுப்பு குறித்து இங்கே காணலாம்.
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
சரோஜாதேவி என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வரும் பாடல் அன்பே வா திரைப்படத்தில் இடம் பெற்ற லவ் பேர்ட்ஸ் பாடல். லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ் என்ற பாடலுக்கு சரோஜாதேவி தனது விரல்களால் காட்டும் அபிநயம் இன்று வரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது.
தொட்டால் பூ மலரும்
படகோட்டி திரைப்படத்தில் எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி இருவருக்கும் அமைந்த காதல் பாடல் தான் தொட்டால் பூ மலரும். தனித்துவமான இசையை கொண்ட இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே சமயம் நியூ திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமானால் ரீமேக் செய்யப்பட்டு மீண்டும் அந்த பாடல் வெற்றி பெற்றது.
பால் வண்ணம் பருவம் கட்டு
எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி இணைந்து நடித்த பாசம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் இசை உலகத்தில் யாராலும் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்துள்ளது.
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
எம்ஜிஆர் தமிழ் சினிமா வரலாற்றில் எங்க வீட்டு பிள்ளை ஒரு வசூல் சாதனை படைத்த திரைப்படமாகும் இந்த பாடலில் இடம்பெற்ற குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாடல் அந்த காலகட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
பேசுவது கிளியா
பணத்தோட்டம் திரைப்படத்தில் எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி இருவருக்கும் அமைந்த காதல் பாடல் தான் இந்த பேசுவது கிளியா பாடல். இன்றுவரை இசை ரசிகர்களால் மறக்க முடியாத இடத்தை இந்த பாடல் பெற்றுள்ளது.
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
பாலும் பழமும் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்ற பாடல் அந்த காலகட்டத்தில் இருந்த பெண்கள் அடிக்கடி முணுமுணுத்த பாடலாக இருந்தது.
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து
புதிய பறவை திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. பாடகி சுசீலா அவர்களின் குரலில் சரோஜாதேவி நளினமான நடிப்பில் இடம்பெற்ற சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்ற பாடல் இன்றுவரை யாராலும் மறக்க முடியாது இடத்தை பெற்றுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
பாலும் பழமும் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் அப்போது இருந்த காதல் பாடல்களில் மிகவும் ஹிட் பாடலாக திகழ்ந்து வந்தது அதற்கு மிக முக்கிய காரணமாக நடிகை சரோஜாதேவி அமைந்தார்.
தங்க மலரே உள்ளமே
தங்கம் நடித்த திரைப்படத்தில் ஜெமினி கணேசன் ஒரு சரோஜாதேவி இணைந்து நடித்த காதல் பாடல் தான் தங்க மலரே உள்ளமே. திருமணமான பெண்களுக்கு இந்த பாடல் அந்த காலகட்டத்தில் மிகவும் பிடித்த பாடல் எனக் கூறப்படுகிறது.
இதுபோன்ற நடிகை சரோஜாதேவியின் எத்தனையோ பாடல்கள் நீங்கா பிடித்து தமிழ் மக்களின் வாயிலும், வாழ்க்கையிலும் உலவி வருகிறது. அவர் இல்லாவிட்டாலும் தமிழ் சினிமா மூலம் ரசிகர்களுக்கு நடிகை சரோஜாதேவி கொடுத்த விருந்து இந்த சினிமா இருக்கும் வரை மறக்க முடியாது.