
ருசியான சிக்கன் லாலிபாப் செய்யலாமா!
நீங்களும் ஒரு சிக்கன் பிரியராக இருக்கிறீர்களா.. இந்த வாரம் ஏதாவது ஸ்பெஷலாக செய்ய விரும்பினால், சிக்கன் லாலிபாப்பை முயற்சிக்கவும்.
சிக்கன் லாலிபாப் ரெசிபி தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ,
மிளகாய் தூள்- 3 டீஸ்பூன்,
கருப்பு மிளகு தூள்- 1 டீஸ்பூன்,
உப்பு- ருசிக்கு ஏற்ப,
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது- 2 டீஸ்பூன்,
கரம் மசாலா- 1 டீஸ்பூன்,
சோயா சாஸ்- 2 டீஸ்பூன்,
மைதா மாவு- 1 கப்,
சோள மாவு- 1 கப்,
எண்ணெய்-பொரித்து எடுக்க தேவையான அளவு
கறிவேப்பிலை 2 கொத்து
சிக்கன் லாலிபாப் தயாரிக்கும் முறை
நீங்கள் கடையில் சிக்கன் வாங்கும் போது அதை லாலிபாப்பிற்கு ஏற்ற வடிவில் வெட்டி வாங்கி கொள்ளுங்கள். நாம் முதலில் ஒரு கிலோ அளவு சிக்கனை வாங்கி நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | ‘உருளைக்கிழங்கு இல்லாத ஜெயின் சமோசா’ இனிப்பு மற்றும் புளிப்பு சட்னியுடன் சுவையே அலாதி!
பிறகு அதில் எலுமிச்சை சாறு, உப்பு, 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், கரம் மசாலா, 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, கருப்பு மிளகு தூள், சோயா சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இதை மூடி வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும்.
இதற்கிடையில், மற்றொரு பாத்திரத்தில், மைதா மாவு, சோள மாவு, 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவை மிகவும் கெட்டியாகவும், அல்லது தண்ணியாகவோ இல்லாமல் கலக்க வேண்டும்.
இதையும் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து கலக்கவும். மீண்டும் மூடி வைத்து 10 நிமிடங்கள் வைக்கவும்.
இதையடுத்து லாலி பாப் பொரிக்க ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஆழமாக வறுக்க போதுமான எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடானதும், சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக வறுக்கவும்.
5 முதல் 6 நிமிடங்கள் நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் அதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். பிறகு அதே எண்ணெய்யில் ஒரு கொத்து கறிவேப்பிலையை பொரித்து எடுத்து சிக்கன் மேல் சேர்த்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் மொறுமொறுப்பான, சுவையான சிக்கன் லாலிபாப்ஸ் சாப்பிட ரெடி. இந்த மாதிரி ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள், உங்களுக்கு நிச்சயமாக இது பிடிக்கும். தக்காளி சாஸுடன் சாப்பிட்டால் இது மிகவும் சுவையாக இருக்கும்.